ஜூலை 7 முதல் சுற்றுப்பயணம் – EPS
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி ஜூலை 7ஆம் தேதி முதல், தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
முதற்கட்டமாக ஜூலை 7ஆம் தேதி கோவையிலிருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்கும் எடப்பாடி பழனிச்சாமி,
ஜூலை இருபதாம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் முதற்கட்ட சுற்றுப்பயணத்தை நிறைவு செய்கிறார்…
இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பகுதியை சேர்ந்த மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

