மதுரையில் புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டட கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை
மதுரை வடக்கு வட்டம் பொதும்பு கிராமத்தில் 27 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொதும்பு கிராமத்தில் புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டட கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். அப்போது, மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.கே.ஜே.பிரவீன் குமார் இ.ஆ.ப., அவர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

