மதிமுக வீழ்த்தப்பட முடியாத சக்தி – மதுரையில் பொதுச் செயலாளர் வைகோ பேட்டி

மதிமுக வீழ்த்தப்பட முடியாத சக்தி – மதுரையில் பொதுச் செயலாளர் வைகோ பேட்டி

மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் மதிமுக-வின் செயல்வீரர்கள் மதுரை மண்டல கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோ மற்றும் பிற முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய வைகோ, “தமிழகத்தின் வாழ்வாதாரங்களை பாதுகாப்பது இணையற்ற சேவைகளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் முல்லை பெரியார் அணையை காப்பாற்றுவதில் உண்ணாவிரதம் மறியல் போராட்டம் நடத்தினோம்.

போராடியதன் விளைவு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நானே வாதாடி இறுதியாக வேண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்தபோது நீதிபதிகள் நிரந்தரமாக ஸ்டெர்லைட்டை மூட வேண்டும் என தீர்ப்பளித்தது.

எங்கள் இயக்கம் தொடங்கும் 31 வருடங்களாகிவிட்டது தமிழர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போராடி வந்தோம்.

திராவிட முன்னேற்றத்திற்காக பக்க பலமாக அரவணைத்து தரவேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இருக்கிறோம்..

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சோதனையான நேரத்தில் மற்றொரு அரணாக மதிமுக உடன் இருக்கும்.

மதுவை ஒழிக்க வேண்டும் என வாய் அளவு பேசாமல் டாஸ்மாக் கடைகளை சூறையாடி நெருப்பு வைத்தார்கள் எனது தோழர்கள்.

2026 தேர்தலில் கூட்டணியாக திராவிட இயக்கத்தை காக்க திமுகவுடன் உடன்பாடு கொள்கிறோம்.

மதிமுக எட்டு இடங்களில் வெற்றி பெற்றால் தான் அரசு அங்கீகாரம் கிடைக்கும் அதனால் கூடுதலாக தான் கேட்போம்..

அண்ணா திமுக திராவிட இயக்கம் கொள்கைக்கு மாறாக செயல்பட்டு வருகிறது அதனால் அதை திராவிட இயக்கமாக ஏற்றுக்கொள்ள முடியாது –

முதல்வர் கவனமாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதி அவர்தான் மதுரை மாநகராட்சி ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ளார்..

ரயில்வே துறையினர் மனிதர்களால் இயக்கப்படும் ரயில்வே கேட்டுகளை அகற்றிவிட்டு, மின்மயமாக மாற்றி விபத்துக்கள் ஏற்படுத்தாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு ரயில்வே துறைக்கும், ரயில்வே அமைச்சகத்திற்கும் அதிகாரிகளுக்கும் இருக்கு..

கடலூர் ரயில் விபத்தில் இரண்டு பச்சிளம் உயிர்கள் பறிபோனது வேதனை அளிக்கிறது” என்றார்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *