திருவாடானை தொகுதி அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி வேட்புமனு தாக்கல்
திருவாடானை தொகுதி அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.
திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேஷிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அதிமுக மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் ஆணிமுத்து, பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் கதிரவன் உடனிருந்தனர். பின்னர் கீர்த்திகா முனியசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, “திருவாடானை தொகுதியில் குடிநீர் பிரச்சினை உள்ளது. நான் வெற்றி பெற்றதும் முதல் பணியாக குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்.”
“காவிரி வைகை குண்டாறு திட்டம் எங்களது பொதுச்செயலாளர் பழனிச்சாமி முதல்வரானதும் நிறைவேற்றப்படும். இத்தொகுதியில் சாலை வசதிகள், பேருந்து வசதிகள் குறைவாக உள்ளது. இதை நிறைவேற்றுவேன். பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவேன்” என தெரிவித்தார்.

