காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் நித்யா சுகுமார் தீவிர வாக்கு சேகரிப்பு!

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் நித்யா சுகுமார் தீவிர வாக்கு சேகரிப்பு!

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் நித்யா சுகுமார், சின்ன காஞ்சிபுரம் பகுதியில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் நித்யா சுகுமார் அவர்களுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் நித்யா சுகுமார் திமுக வரலாற்றிலேயே காஞ்சிபுரத்தில் முதல் முதலாக போட்டியிடும் பெண் வேட்பாளர் ஆவார்.

இவர் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்து சேஷாத்திரிபாளை தெரு, பழனி தெரு, திருவள்ளுவர் தெரு, திருகாளிமேடு உள்ளிட்ட பல்வேறு வீதிகளில், வீதி வீதியாக சென்று வாக்குகள் சேகரித்தார்.

இதில் லைன். கிருபாகரன் சகோதரர்கள் சார்பில் பொன்னாடைகள் மற்றும் பிரம்மாண்ட மாலைகள் அணிவித்து சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதே போல் இவருக்கு வழி எங்கும் பொன்னாடைகள் மலர்மாலைகள் அணிவித்து சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வி எஸ் ராமகிருஷ்ணன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், துணை மேயர் குமரகுருநாதன், மாநகரத் தலைவர் நாதன், திமுக பகுதி செயலாளர் திலகர், சந்துரு, தசரதன், வெங்கடேசன், துணைச் செயலாளர் வழக்கறிஞர் வினோத்குமார், நிர்மலா, மாநகர செயலாளர் சி கே வி தமிழ்ச்செல்வன், துணைச் செயலாளர் முத்து செல்வம், மண்டல குழு தலைவர் செவிலிமேடு மோகன், மாவட்ட மகளிர் அணி தலைவர் செல்வி மகளிர் அணி நிர்வாகிகள், காங்கிரஸ் மாநில பொது குழு உறுப்பினர் பத்மநாபன், அரங்கநாத நகர் அன்பு, மாவட்ட நிர்வாகிகள் பூக்கடை மணிகண்டன், மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சுமங்கலி சீனிவாசன், லைன் குப்புசாமி, முன்னாள் நகர மன்ற உறுப்பினர் டி பி சீனிவாசன், பூந்தோட்டம் பழனி, பி எம் சுகுமார், லோகநாதன், பிரபு, மாநகர பகுதி தலைவர்கள் காஞ்சி காமராஜ், பட்டு காமராஜ், சப்தகிரி சங்கரலிங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் லைன் அருள்நாதன், வழக்கறிஞர் மதியாதவன் மற்றும் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கமலக்கண்ணன், சுரேஷ், சுதா என்கின்ற சுப்பராயன், வட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *