ராமநாதபுரத்தில் முடி திருத்தும் தொழிலாளர்கள் பேரணியாக வந்து ஆட்சியரிடம் மனு

ராமநாதபுரத்தில் முடி திருத்தும் தொழிலாளர்கள் பேரணியாக வந்து ஆட்சியரிடம் மனு

கார்ப்பரேட் சலூன் விலைப்பட்டியல் விளம்பர பலகையை அகற்றக்கோரி 50க்கும் மேற்பட்ட முடி திருத்தும் தொழிலாளர்கள் பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் முடி திருந்தும் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்பட்டு, சங்கத்திற்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டு நூற்றுகணக்கான தொழிலாளிகள் முடி திருத்தும் தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ராமநாதபுரத்தை சேர்ந்த சிவா என்பவர் ராமநாதபுரம் நகர் பகுதியில் 4 கார்ப்பரேட் கடைகளை உருவாக்கி வெளியில் போர்டு வைத்து விளம்பரம் செய்வதால் இவரைப் பார்த்து மற்ற கார்ப்பரேட் கடைகளும் அவரை பின்பற்றி முடி திருத்த 99 ரூபாய் எனவும், முக சவரம் செய்ய 49 ரூபாய் எனவும் குறைந்த விலையில் பிரம்மாண்டமாக விளம்பரம் செய்துள்ளனர்.

நகர் முழுவதும் விளம்பர போஸ்டர்கள் மற்றும் பெரிய அளவில் விளம்பர பதாகைகளை வைத்துள்ளனர்.

மருத்துவர் நலச்சங்க நிர்ணயித்த தொகையை விட மிகவும் குறைவானதாக இருப்பதால் ராமநாதபுரம் நகரில் 120 சலூன் கடைகளுக்கு தொழில் பாதிக்கும்.

இதனால் நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் 300 குடும்பங்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

எனவே கார்ப்ரேட் பெரிய அளவில் ஹைடெக் சலூன் கடைகளை தொடங்கி நடத்தி வரும் அக்கடையின் உரிமையாளரிடம் விசாரணை செய்து விலை விளம்பரப் பேனர்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து மருத்துவர் சமூக நலச் சங்கத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட முடி திருத்தும் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பேரணியாக வந்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *