தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2026 : வாக்குப்பதிவு முழு அப்டேட்

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2026 : வாக்குப்பதிவு முழு அப்டேட்

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2026 வாக்குப்பதிவு முழு அப்டேட்டை இப்போது பார்க்கலாம்.

தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்கள் அதிக ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச் சாவடியில், முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது குடும்பத்தாருடன் சென்று ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். இதேபோல், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.

சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில், அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தனது மனைவி மற்றும் மகனுடன் சென்று ஜனநாயக கடைமையை நிறைவேற்றினார்.

அதேபோல், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச் சாவடிக்கு சென்ற, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது வாக்கை பதிவு செய்து, ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

நீலாங்கரை வாக்கு மையத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான வாக்களித்தார்.

சென்னை சாலிகிராத்தில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தனது வாக்கை பதிவிட்டார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடியில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.

அதேபோல், அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், அனைத்துக் கட்சி நிர்வாகிகள், திரை பிரபலங்கள், உள்ளிட்டோரும் தங்களது வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

இந்த தேர்தலில் சில சுவாரஸ்ய தருணங்களும் இருந்தன. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உற்சாகமாக வாக்களித்தனர். இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்றனர்.

திருமணமான தம்பதிகளும் மாலையும் கழுத்துமாக வாக்குச் சாவடிக்கு வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. போலீசார் கண்காணிப்பில் அமைதியாக தேர்தல் நடைபெற்றது.

மொத்தத்தில் தமிழ்நாடு தேர்தல் அமைதியாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்றுள்ளது. மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *