மாவட்ட அளவிலான அமெச்சூர் ஆணழகன் போட்டி : திண்டுக்கல்லைச் சேர்ந்த விவேக் சாம்பியன்

மாவட்ட அளவிலான அமெச்சூர் ஆணழகன் போட்டி :  திண்டுக்கல்லைச் சேர்ந்த விவேக் சாம்பியன்

திண்டுக்கல்லில் இயங்கி வரும் அர்னால்டு மல்டி ஜிம் மின் 50 ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட அளவிலான அமெச்சூர் ஆணழகன் போட்டி நடைபெற்றது.

மிஸ்டர் ஆர் எம் எஸ் கிளாசிக் ஆணழகன் போட்டி நடைபெற்றன. இதில் திண்டுக்கல், சின்னாளப்பட்டி, நிலக்கோட்டை, வேடசந்தூர், நத்தம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதிலும் உள்ள 15க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி கூடத்தில் இருந்து 150 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

போட்டிகள் எடை பிரிவில் 50, 55, 60, 65, 70, 75, 80, 80 கிலோவுக்கு மேல் என ஒவ்வொரு பிரிவுகளாக சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், மாஸ்டர் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

இதில் உடற்கூறு, உடல் அமைப்பு, தசை அமைப்பு ஆகியவற்றை வைத்து மதிப்பெண்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசாக தங்கப்பதக்கம், கேடயம், 1500 ரூபாய் ரொக்க பரிசு மற்றும் ஆணழகன் ரிப்பன் அணிவிக்கப்பட்டது.

இரண்டாம் பரிசாக 1000 ரூபாய் மற்றும் வெள்ளி கேடயமும், மூன்றாம் பரிசாக 500 ரூபாய் மற்றும் வெண்கலக் கேடயமும் பரிசுகளாக வழங்கப்பட்டன.

தொடர்ந்து அனைத்துப் பிரிவுகளிலும் முதலிடம் பெற்ற போட்டியாளர்களை கொண்டு ஒட்டுமொத்த ஆணழகன் போட்டி நடத்தப்பட்டது.

இதில் முதல் பரிசாக ப்ரோ ஜோன் பிட்னெஸை சேர்ந்த விவேக் தனது உடற்கட்டு திறன்களை காட்டி முதல் பரிசாக ஐம்பதாயிரம் ரூபாய், தங்க கேடயம் மற்றும் ஆணழகன் பட்டம் பெற்றார். இரண்டாம் இடம் பிடித்த பிரபுவிற்கு முப்பதாயிரம் ரூபாய் வெள்ளிக் கேடயமும், மூன்றாவது இடம் பிடித்த யாசர் அராபத்துக்கு பத்தாயிரம் ரூபாய் மற்றும் வெண்கல கேடயமும் பரிசுகளாக வழங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து 91 புள்ளிகள் பெற்ற அர்னால்டு மல்டி ஜிம் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பை பெற்றது. இரண்டாம் இடப் கோப்பையை ஜெனிடிக் ஜிம் பெற்றது.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட துணை கண்காணிப்பாளர் கார்த்திக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மிஸ்டர் திண்டுக்கல் மற்றும் ஒட்டுமொத்த சாம்பியன் ஆகிய பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்க நடுவர்கள் சிவராமசுதன், ஜமால், பிரபா ஆகியோர் கலந்துகொண்டு மதிப்பெண்கள் கணக்கிட்டு ஆணழகன்களை தேர்வு செய்தனர்.

நிகழ்ச்சியில் ஆணழகன் போட்டிகளை பார்வையிட வந்த சிறுவன் இம்மானுவேல், சிறப்பு நிகழ்ச்சியாக தனது திறனை காட்டும் வகையில் தனது உடற்கட்டுகளையும் காட்டி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார்.

போட்டிகளுக்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் அர்ணால்டு மல்டி ஜிம் நிர்வாகி, ஜிம் உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஜான் வில்லியம் லாரன்ஸ், ராஜ்குமார், சதீஷ்குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *