விநாயகர் சதுர்த்தி: திண்டுக்கல்லில் 108 மின்விளக்கு & 108 காமாட்சி விளக்கு வைத்து அலங்கரிக்கப்பட்ட 108 விநாயகர்

திண்டுக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது 108 விநாயகர் கோவிலில் ஆகும். திண்டுக்கல்லின் மையப்பகுதியில் உள்ள கோபாலசமுத்திர கரையில் அமைந்துள்ள இந்த கோவிலில் சக்கர கணபதி, கல்யாண கணபதி, சதுர்த்தி கணபதி, திசை முக கணபதி, சித்தி கணபதி, புத்தி கணபதி, மங்கள கணபதி, சந்தன கணபதி என ஒரே இடத்தில் 108 பிள்ளையார் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 32 அடி உயர மிக பிரம்மாண்டமான விநாயகர் சிலையும் உள்ளது.
இந்நிலையில் நாளை இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று திண்டுக்கல் 108 விநாயகர் கோவிலில் உள்ள விநாயகர்களுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.
பின்னர் கோவில் முழுவதும் 108 மின்சார குத்து விளக்குகளும், 108 காமாட்சி விளக்குகளும் வைத்து ஒளிமயமாக விநாயகர் காட்சியளித்தார். இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.