தங்கம் வாங்கப் போறீங்களா? உடனே வாங்குங்க! சரிந்து வரும் தங்கம் விலை!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.680 குறைந்து ஒரு சவரன் ரூ,73,880-க்கு விற்பனையாகி வருகிறது.
கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை குறைந்து வருவது, நகைப் பிரியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும் செய்கிறது. இறங்கவும் செய்கிறது.
கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையில் ஏற்றமும் இறக்கமும் இருந்து வருகிறது. கடந்த இரு நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,360 குறைந்திருப்பது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது.