அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்
அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை ஜூலை 15ம் தேதி முதல் தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை, நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2024-25ம் கல்வியாண்டில், கிராமப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளையும் உள்ளடக்கியதாக காலை உணவுத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டது.
சட்டப்பேரவையில் காலை உணவு திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.600.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை ஜூலை 15ஆம் தேதி முதல் விரிவுபடுத்த தமிழ்நாடு அரசின் சார்பில் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

