காஞ்சிபுரத்தில் முதல்வரின் காலை திட்ட உணவு

காஞ்சிபுரத்தில் தமிழக முதல்வரின் காலை திட்ட உணவு காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் எஸ். எஸ். கே. வி. பள்ளியில் துவக்கி வைத்தார்.
தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் சென்னையில் காலை உணவு திட்டத்தினை துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் எஸ். எஸ். கே. வி. மேல்நிலைப் பள்ளியில் சிறு குழந்தைகளுக்கான காலை உணவு திட்டத்தினை சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து மாணவ மாணவிகளுடன் அமர்ந்து காலை உணவு உண்டார். இதில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மண்டல குழு தலைவர்கள் மோகன், சாந்தி, சசிகலா, சந்துரு, மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ், மாநகராட்சி கல்வி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இலக்கியா சுகுமார், அஸ்மா பேகம் சரஸ்வதி பகுதி செயலாளர் திலகர், மாநகர இளைஞரணி அமைப்பாளர் சுகுமார் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.