காஞ்சிபுரத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்
காஞ்சிபுரம் எம்எல்ஏ ஏற்பாட்டில் சி.வி.எம். அண்ணாமலை அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில், பணி ஆணைகளை அமைச்சர் காந்தி வழங்கினார்.

பேரறிஞர் அண்ணாவின் நண்பரும், முன்னாள் அமைச்சர்ருமான சி.வி.எம். அண்ணாமலை அறக்கட்டளை சார்பில் காஞ்சிபுரம் எஸ் எஸ் கே வி மேல்நிலைப் பள்ளியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் தலைமையில் நடைபெற்றது.
இதில் 75 க்கு மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் ஏராளமான நபர்கள் பயன்படுவதில் பணி ஆணைகள் வழங்கபட்டது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அருகில் உள்ள செய்யாறு, வந்தவாசி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பத்தாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு ஐடிஐ டிப்ளமோ மற்றும் அனைத்து வகையான பட்டப்படிப்புகளுக்கும் வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த வேலை வாய்ப்பு முகாம் வழக்கமான வேலை வாய்ப்பு முகாமாக இல்லாமல் க்யூ ஆர் கோடு வழங்கப்பட்டு ஸ்கேன் செய்து, அவர்களுக்கு வேலை தேடுவதற்கான யூனிக் ஐடி அமைக்கப்பட்டு இருந்தது.

இதன் மூலம் அவருடைய விவரங்கள் அறிந்து சம்பந்தப்பட்ட கம்பெனிகளுக்கு வேலை தேடுபவர்களுக்கு விவரங்கள் அனுப்பி வைக்கப்படும்.
இதில் காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், உத்திரமேரூர் தொகுதி எம்எல்ஏ க. சுந்தர் ,மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் தனியார் கல்லூரி தன்னார்வலர்கள், ரோட்டரி சங்கம், அரிமா சங்கம், உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் மேலும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு குடிநீர் மற்றும் தேநீர், ஸ்னாக்ஸ் வசதிகளும் உணவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் வி எஸ் ராமகிருஷ்ணன், மாநகர செயலாளர் சி கே வி தமிழ்ச்செல்வன், துணைச் செயலாளர் முத்துச்செல்வம், பகுதி செயலாளர் திலகர், சந்துரு, வெங்கடேசன், தசரதன், காஞ்சிபுரம் ஒன்றிய செயலாளர் B.M.குமார், காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார், எம் எஸ் சுகுமார், மாவட்ட இளைஞரணி யுவராஜ், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், வட்டச் செயலாளர், பகுதி துணைச் செயலாளர், வழக்கறிஞர் வினோத்குமார், குடியரசு மற்றும் ஆதித்யன் அகத்தியன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பாக நடத்தினர்.

