காஞ்சிபுரத்தில் பேரிடர் கால மூன்று நாள் பயிற்சி முகாம்

காஞ்சிபுரத்தில் பேரிடர் கால மூன்று நாள் பயிற்சி முகாம்

காஞ்சிபுரத்தில் பேரிடர் கால மூன்று நாள் பயிற்சி முகாம் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாநிலம் தழுவிய மூன்று நாள் புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதில் காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் பேரிடர் காலபயிற்சி, ஆளுமை பண்பு பயிற்சி, அடிப்படை முதல் உதவி பயிற்சி, வரலாற்று ஆவணங்களை தெரிந்து கொள்ளும் வகையிலான கலைப் களப்பயணம், விடுதலைப் போராட்ட வீரர் வ. உ. சி. மற்றும் சமூக விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் கல்லூரி முதல்வர் முனைவர் கலை இராம.வெங்கடேசன் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கணபதி வரவேற்புரை ஆற்றினார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற வேலைவாய்ப்பு துறை அலுவலர் தணிகைவேலு, தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் நீலகண்டன், அரசு அருங்காட்சியக அலுவலர் உமாசங்கர் ஆகியோர் கலந்து கொண்டு ஆளுமை திறன் பயிற்சி குறித்து சிறப்புரையாற்றினார்கள்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *