காஞ்சிபுரத்தில் QR Code மூலம் ஆட்டோக்களின் ஆவணங்களை ஆய்வு செய்த ஆட்சியர்

காஞ்சிபுரத்தில் QR Code மூலம் ஆட்டோக்களின் ஆவணங்களை ஆய்வு செய்த ஆட்சியர்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போக்குவரத்து துறை சார்பில் ஆட்டோக்களின் ஆவணங்களை ஆய்வு செய்யும் பொருட்டு, பார்கோடு வில்லைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன் ஆட்டோக்களில் ஒட்டி ஸ்கேன் செய்து ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோக்களின் ஆவணங்களை கண்டறிய பார் கோடு ஒட்டு முறையினை போக்குவரத்துத் துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் பார்த்தவுடன் ஆவணங்கள் நடப்பில் உள்ளது எனவும், காஞ்சிபுரம் நகர எல்லைக்குள் அனுமதி பெற்ற வாகனம் எனவும் கண்டறிய பயன்படுகிறது.

மேலும் பார்கோடு இல்லாத வாகனம் ஆவணங்கள் நடப்பில் இல்லாத வாகனமாக கருதி மோட்டார் வாகனச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், பொது இடங்கள் மற்றும் கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் போக்குவரத்து காவல் துறையால் ஆய்வு செய்யப்படும் வாகனங்கள் பார்கோடு வசதிமூலம் விரைவாக ஆவணங்களை ஆய்வு செய்யவும், மகளிர் பயணத்திற்கும் பாதுகாப்பானதாக அமையும், பார்கோடு உள்ள வாகனம் மட்டுமே காஞ்சிபுரம் நகர எல்லைக்குள் இயக்க அனுமதிக்கப்படும்.

அதன்படி காஞ்சிபுரத்தில் இயக்கப்படும் அனைத்து ஆட்டோக்களிலும் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்கோடு ஒட்டுவில்லைகளை ஒட்டி, ஸ்கேன் செய்து, ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன், மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *