ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கிய தலைவர்

ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கிய தலைவர்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் மாநில காங்கிரஸ் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினருமான செல்வப் பெருந்தகை அவர்கள் கட்சி நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கூட்டரங்கில் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு மற்றும் வாழ்த்து வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட பொறுப்பாளரும் ஸ்ரீபெரும்புதூர் நகர தலைவருமான அருள்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினரும், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவருமான செல்வப் பெருந்தகை அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஸ்ரீபெரும்புதூர் நகராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளில் உள்ள கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வழங்கி தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார்.

இதில் மாவட்ட எஸ்சி எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் தங்கராஜ், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் முருகன் சாந்தகுமார், மாவட்ட மகளிர் அணி நிர்வாகி சுமிதாபாய், கிழக்கு வட்டார தலைவர்கள் வல்லக்கோட்டை புண்ணியநாதன், செல்வராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *