காஞ்சிபுரத்தில் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம்: CSI மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஏற்பாடு

காஞ்சிபுரத்தில் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம்: CSI மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஏற்பாடு

காஞ்சிபுரத்தில் 120 ஆண்டு பழமை வாய்ந்த சிஎஸ்ஐ மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற்றது.

 காஞ்சிபுரம் செங்கழுநீர் ஓடை வீதி தர்கா பின்புறம் அமைந்துள்ள ஜமாத் வளாகத்தில் 120 ஆண்டுகளாக மருத்துவ சேவை செய்து வரும் சிஎஸ்ஐ மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில் ரத்த அழுத்தம் ரத்தத்தில் சர்க்கரை அளவு, கண் பரிசோதனை ஆகியவை இலவசமாக பார்க்கப்பட்டது.

மேலும் கண் கண்ணாடி தேவைப்படும் நபர்களுக்கு குறைந்த செலவில் கண் கண்ணாடி வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது நிகழ்ச்சியினை மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வி. ரூபி ரம்யா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

இதில் ஜமாத்தின் தலைவர் லியாகச் ஷெரீப், சமத் சாகப் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

இதில் கண் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். ஜூடோ சாமுவேல் கலந்து கொண்டு நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்தார்.

முன்னதாக ஏராளமானோர் பி.பி சுகர் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்து கொண்டனர். இதில் மசூதி உறுப்பினர் தில் சாத். துணைச் செயலாளர் கே. பி. கலில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மருத்துவமனை மேலாளர் தாரன் சிறப்பாக செய்திருந்தார்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *