காஞ்சிபுரம் சித்தீஸ்வரர் ஆலயத்தில் திருவண்ணாமலை கிரிவல குழுவின் 28 ஆம் ஆண்டு விழா
காஞ்சிபுரம் சித்தீஸ்வரர் ஆலயத்தில் திருவண்ணாமலை கிரிவல குழுவின் 28 ஆம் ஆண்டு விழா விமர்சையாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் அருள்மிகு சித்தீஸ்வரர் ஆலய வளாகத்தில் திருவண்ணாமலை கிரிவல குழுவின் 28 ஆம் ஆண்டு விழா விமர்சையாக நடைபெற்றது.
இதில் காந்தி சாலையில் அமைந்துள்ள முத்தீஸ்வரர் ஆலயத்தில் இருந்து சிவகாமி உடனாகிய நடராஜ பெருமான் சிறப்பு சிவ மேல இசையுடனும் கோலாட்டங்களுடனும் ஊர்வலமாக வந்து சித்திஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதனைத் தொடர்ந்து கிரிவல குழுவின் நிறுவனர் கேதாரச் செல்வர் எஸ்.டி. கங்காதரன் தலைமையில் செல்வி எஸ். சிவ. கீர்த்தி அவர்களின் திருமுறை இன்னிசையும் ஜெயஸ்ரீ நாட்டியகுழுவினரின் பரதநாட்டியமும் நடைபெற்றது.
இதில் தெய்வத்தமிழ் மாமன்றம் நிறுவனர் சிவ. கு. ராமலிங்கம் முன்னிலை வகித்தார். கேதார செல்வர். சிவ.ஸ்ரீ பாலசுப்ரமணிய சிவாச்சாரியார் வரவேற்புரை ஆற்றினார்.

கௌரவத் தலைவர் ஜானகிராமன் தலைமை உரையாற்றினார். உதவி செயலாளர் செல்வி வெங்கட் அறிமுக உரை ஆற்றினார். மற்றும் சிவ.ஞான. சரஸ்வதி, ஓய்வு பெற்ற டிஎஸ்பி வேலியப்பன், நாகராஜன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கிரிவலம் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம், உபதலைவர் பத்மநாபன் தலைவர் அசோகன் ஆகியோர் மகிழ் உரை ஆற்றினார்கள்.
பொருளாளர் முத்துகிருஷ்ணன் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார். இதில் ஏராளமான சிவ பக்தர்கள் ஆன்மீக ஆண்டுகள் சான்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

