H. வசந்தகுமார் நினைவு நாள்: காஞ்சிபுரத்தில் இன்று அனுசரிப்பு

காஞ்சிபுரத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் H. வசந்தகுமார் அண்ணாச்சி அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் மாவட்ட வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் பூக்கடை மணிகண்டன் தலைமையில் அனுசரிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் காந்தி சாலை காமராஜர் சிலை அருகே உழைப்பால் உயர்ந்தவரும் காங்கிரஸ் கட்சிக்கு என தொடர் உழைப்பை கொடுத்தவருமான ‘உழைப்பின் சிகரம்’ என அனைவராலும் போற்றப்படும் முன்னாள் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் H. வசந்தகுமார் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் பூக்கடை மணிகண்டன் தலைமையில் அனுசரிக்கப்பட்டது.
இதில் கர்மவீரர் காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வசந்தகுமார் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அனுசரிக்கப்பட்டது.
இதில் வர்த்தக காங்கிரஸ் நிர்வாகிகள் சங்கரலிங்கம், வையாவூர் லோகு, சுந்தரம், நூல் கடை ராதாகிருஷ்ணன், மாவட்டத் துணைத் தலைவர் தாரன், மாநில நிர்வாகி அரங்கநாத நகர் அன்பு, காஞ்சி மாநகர பகுதி தலைவர் காமராஜ், முத்து கணேசன், வட்ட நிர்வாகி மோதிலால் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.