இந்திரா காந்தி நினைவு நாளை ஒட்டி ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரசார் மரியாதை
அன்னை இந்திரா காந்தியின் நினைவு நாளை ஒட்டி, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி நினைவிடம் முன்பு அமைந்துள்ள அன்னை இந்திரா காந்தி சிலைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடம் முன்பு அமைந்துள்ள அன்னை இந்திரா காந்தி திருவுருவ சிலைக்கு அண்ணாரது நினைவு நாளை ஒட்டி முன்னாள் மத்திய அமைச்சரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளரும் ஸ்ரீபெரும்புதூர் நகர தலைவருமான அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் அன்னதானங்களும் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட பொறுப்பாளர் நிக்கோலஸ், SC ST மாவட்ட தலைவர் தங்கராஜ், சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவர் முருகன் சாந்தகுமார், மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சுமிதாபாய், மூத்த காங்கிரஸ் தலைவர்கள் புண்ணியநாதன், முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


