காஞ்சிபுரத்தில் கலைஞர் சிலையை திறந்து வைத்த அமைச்சர் MRK.பன்னீர்செல்வம்

காஞ்சிபுரத்தில் கலைஞர் சிலையை திறந்து வைத்த அமைச்சர் MRK.பன்னீர்செல்வம்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மேட்டு தெருவில் அமைந்திருந்த காஞ்சிபுரம் மாநகர திமுக அலுவலகத்தை புதுப்பித்து புதிய கலைஞர் சிலையை நிறுவி அதனை இன்று காஞ்சிபுரம் மாநகர திமுக சார்பில் மாநகர திமுக அலுவலகம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு அரங்கத்தை, கலைஞர் சிலையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

 

 

இதில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கைத்தறி துறை அமைச்சர் காந்தி, பாராளுமன்ற உறுப்பினர் செல்வம், சட்ட மன்ற உறுப்பினர்கள் சுந்தர் மற்றும் எழிலரசன் ஆகியோர் உடன் உள்ளனர். மாநகரச் செயலாளர் சி கே வி தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், “பயிர்கள் சேதம் அடையவில்லை, தாழ்வான பள்ளங்களில் நெருப்பயிர்கள் சாய்ந்து உள்ளது 25 ஆயிரம் எக்டர் பயிர் சாய்ந்துள்ளது, இதில் 255 ஹெக்டர் நெற்பயிர்கள் 33 சதவீதம் ஈரப்பதத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ஏற்றார் போல் இழப்பீடுகளை முதலமைச்சராக அறிவிப்பார்.”

“தவெக தலைவர் விஜய் முன்பு செட் அமைந்து நடித்தார், ஆனால் தற்போது அதே போன்று நடிக்கிறார், 100 கோடி 200 கோடி சம்பளம் வாங்கிய நடிகர் தற்பொழுது அரசியலுக்கு வருவதால் ஏதோ ஆதாயத்துடன் தான் வருகிறார். ஆனால் கொரோனா களத்தில் மக்களுடன் நின்று போராடி வந்தவர் திமுக தான், ஆட்சிக்கு வருவோம் என்று எதிர்பாராமல் எப்போதும் மக்களிடம் நிற்பது தான் திராவிட முன்னேற்ற கழகம்” என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வன் பேட்டி அளித்தார்.

இதில் பொதுக்குழு உறுப்பினர் எம் எஸ் சுகுமார், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், பகுதி செயலாளர்கள் திலகர், சந்துரு, வெங்கடேசன், தசரதன், மாநகர துணை செயலாளர் முத்து செல்வம் நிர்மலா, பொருளாளர் சுதா என்கின்ற சுப்பராயன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் செல்வி, மாநகர இளைஞரணி அமைப்பாளர் சுகுமார், மாநகர வட்டச் செயலாளர்கள், பகுதி நிர்வாகிகள், பகுதி துணைச் செயலாளர் வழக்கறிஞர் வினோத்குமார், குடியரசு மகளிர் அணி நிர்வாகிகள், மாவட்ட ஒன்றிய மாநகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மலர்மன்னன் நன்றிகளை தெரிவித்தார்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *