காஞ்சிபுரத்தில் சேவா ரத்னா கேகே நடராஜன் நினைவு நாள் அனுசரிப்பு


காஞ்சிபுரம் எஸ் எஸ் கே வி மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் சேவா ரத்னா கேகே நடராஜன் அவர்களின் நினைவு நாள் கம்பன் கழகம் சார்பில் அனுசரிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள எஸ் எஸ் கே வி மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் கம்பன் கழகத்தில் கடந்த 27 ஆண்டுகளாக தலைவராக இருந்து செயல்பட்டு வந்த ராமஸ் கேப் ஹோட்டல் நிறுவனமான சேவா ரத்னா திரு கே கே நடராஜன் அவர்களின் 24 வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

இதில் பள்ளியின் செயலாளர் டாக்டர் சி கே ராமன், சென்னை கம்பன் கழகத்தின் செயலர் ஒரு வழக்கறிஞர் வழக்கறிஞர் பால சீனிவாசன் ஆகியோர் சிறப்பு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பல்வேறு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றுகளும் பண பரிசுகளும் ஊக்கத்தொகைகளும் வழங்கினார்.
இதில் கம்பன் கழகத்தின் துணைத் தலைவர் டி ஆர் சுப்பிரமணி வரவேற்புரை ஆற்றினார்.

இதில் கம்பன் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ராமர் ஸ்கேப் உரிமையாளரும் கம்பன் கழகத்தின் துணைத் தலைவருமான திரு டி ஆர் சுப்பிரமணியன் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.
இதில் ரோட்டரி மோதிலால் ஸ்ரீதர் மற்றும் ஆன்மீக ஆன்றோர்கள் பட்டிமன்ற பேச்சாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டது

