காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி வைரவேல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி
 
					காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி வைரவேல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
 காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமாக விளங்கக்கூடிய குமரகோட்டம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
  காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமாக விளங்கக்கூடிய குமரகோட்டம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்தினை 108 முறை வலம் வந்து தங்களது நேர்த்திக் கடனை சமர்ப்பித்தனர். மேலும் ஆறுமுகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வண்ணமலர் அலங்காரம் செய்யப்பட்டு வைரவேல் சாத்தப்பட்டு சிறப்பு தூப தீப ஆராதனைகள் நடைபெற்றது.

ஆண்டுக்கு ஒரு முறையே இந்த வைரவேல் ஆறுமுகப்பெருமானுக்கு சாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவினை ஒட்டி ஆலய செயலாளர்கள் கேசவன் ஏற்பாட்டில் காஞ்சிபுரம் குமரக்கோட்டம் கந்த சஷ்டி வரவேற்பு குழு சார்பில் சந்துரு தலைமையில் 108 மலர்கள் காய்கனிகள் உலர் காய்கனிகள் சமர்ப்பிக்கப்பட்டு இந்திர பூஜை விமர்சையாக நடைபெற்றது.
இதில் வரவேற்பு குழுவைச் சார்ந்த சுமார் வினோத் குமார் உள்ளிட்ட விழா குழுவினர் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். மேலும் ஏராளமான பக்தர்கள் சிறப்பு லட்சார்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் காலை நிர்வாகம் சார்பில் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.




 
			 
			 
			 
			 
			