காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் சுதந்திர தின விழா
காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் சாதிக் பாஷா தலைமையில் சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.

காஞ்சிபுரம் ராணுவ சாலையில் காங்கிரஸ் முன்னாள் சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவர் சாதிக் பாஷா தலைமையில் சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், எழுதுபொருள்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றி மாணவ மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கினார். இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


