காஞ்சி ஸ்ரீ தேவராஜசுவாமி திருமலை பாதயாத்திரை சார்பில் சிறப்பு பூஜை
காஞ்சி ஸ்ரீ தேவராஜசுவாமி திருமலை பாதயாத்திரை சார்பில் பதினோராம் ஆண்டு பாதயாத்திரை விழா சிறப்பு பூஜையுடன் விமர்சையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் டி கே நம்பி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் சுவாமி ஆலயத்தில் காஞ்சி ஸ்ரீ தேவராஜர் திருமலை பாதயாத்திரை சார்பில் திருப்பதிக்கு பாதயாத்திரை புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை ஒட்டி முதல் நாள் இரவு சிறப்பு பஜனை பாடல்கள் பாடி பெருமானுக்கு சிறப்பு தீப ஆராதனைகள் மற்றும் அன்னதானங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அதிகாலை பக்தர்கள் பாதை யாத்திரையாக திருமலைக்கு புறப்பட்டு சென்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் பேரருளைப் பெற்று சென்றனர்.

