காஞ்சிபுரம் பழனி ஆண்டவர் கோவிலில் பால்குட விழா
கந்த சஷ்டி பெருவிழா ஐந்தாவது நாளை ஒட்டி 108 வேல் தரித்தல் மற்றும் 108 பெண்கள் பால்குடம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதி அருகே நிமந்தக்கார தெருவில் அமைந்துள்ள பழனி ஆண்டவர் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
சஷ்டி விரதம் தொடங்கி இருப்பதினால் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த முருக பக்தர்கள் ஏராளமானோர் பழனி ஆண்டவர் முருகன் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கந்த சஷ்டி திருவிழாவின் ஐந்தாவது நாளான இன்று மேற்கு ராஜவீதியில் அமைந்துள்ள ஒத்தவாடை தெருவில் உள்ள அமரேசுவரர் திருக்கோவிலில் இருந்து நரேஷ் என்றபக்தர் 108 வேல் தரித்தல் மற்றும் 108 பெண்கள் பால்குடம் ஏந்தி திருவீதி உலா தொடங்கியது.
பம்பை மேளதாளங்கள் முழங்க மேற்கு ராஜவீதி, கச்சபேஸ்வரர் கோவில், சங்கர மடம், ஏகாம்பரநாதர் சன்னதி வீதி என முக்கிய நகர வீதி வழியாக வளம் வந்து பழனி ஆண்டவர் கோவிலுக்கு வந்தடைந்தது.

பால்குடம் ஏந்தி வந்த பக்தர்கள் முருகருக்கு பால் அபிஷேகம் செய்து கந்த சஷ்டி பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் அப்பகுதிவாசிகளுடன் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.
பக்தர்கள் தங்கள் திருக்கரங்களாலேயே முருகப்பெருமானுக்கு பாலபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.

