காஞ்சிபுரத்தில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் கொண்டாடிய விவசாய குடும்பத்தைச் சேர்ந்த தம்பதி!

காஞ்சிபுரத்தில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் கொண்டாடிய விவசாய குடும்பத்தைச் சேர்ந்த தம்பதி!

செங்கரும்பில் பிரமாண்ட திருத்தேரை வடிவமைத்து பொங்கல் கொண்டாடி விழிப்புணர்வை ஏற்படுத்திய காஞ்சிபுரம் விவசாய குடும்பத்தினரை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.

காஞ்சிபுரம் அடுத்த கீழ்க்கதிப்பூர் குண்டு குளம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார் – செல்வி தம்பதியினர்.

விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் ஆண்டுதோறும் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழாவினை கொண்டாடி வருகின்றனர்.

குறிப்பாக செந்தில்குமார் குடும்பத்தினர் விவசாயத்தை போற்றும் வகையிலும், இளைய தலைமுறையினரியே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செங்கரும்பில்லான பிரம்மாண்ட பானை, ஜல்லிக்கட்டு காளை, பாரத பிரதமர் மோடியின் உருவம், பாரம்பரிய குடிசை குடில், மாட்டு வண்டி, காளை மாடுகள் என ஆண்டுதோறும் ஒவ்வொரு விதமான வடிவங்களை மூன்று டன் செங்கருப்பில் வடிவமைத்து பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு வினோதமாக பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் விதமாக கடந்த 15 நாட்கள் 15 பேருடன் இணைந்து கடின உழைப்பில் 21அடி உயரமும் 10அடி அகலமும், 5டன் செங்கரும்பினால் மிகப்பெரிய செங்கரும்பு திருத்தேர் உருவாக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, அத்தேரின் முன்பு பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையை தங்கள் குடும்பத்தினரோடு பாரம்பரிய முறைப்படி கொண்டாடி மகிழ்ந்தனர்.

 

ஐந்து டன் எடை கொண்ட செங்கரும்பினால் உருவாக்கப்பட்ட தேரை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதாக தேரை தயாரித்த செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய செங்கரும்பிலான திருத்தேருடன் விவசாய குடும்பத்தினர் பொங்கல் கொண்டாடியதை அறிந்து, ஏராளமான கிராம மக்கள் அந்தப் பகுதிக்கு வந்து ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்து சென்று வருகின்றனர்.

இந்த தேர், பாரம்பரிய கலை மற்றும் பண்டிகை உற்சாகத்தை ஒன்றாக இணைத்து உள்ளூர் மக்களிடம் பெரும் கவனத்தையும் உற்சாகத்தையும் பெற்றுள்ளது.

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *