காஞ்சிபுரம் பேருந்துநிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம்
 
					உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் பிஆர்.கவாய் அவர்களை தாக்க முயன்ற சனாதனி ராகேஷ்கிஷோரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்திலும், சென்னை உயர்நீதிமன்ற சாலையில் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் காரை வழிமறித்து வன்முறையில் ஈடுபட்ட ஆர்எஸ்எஸ் கைக்கூலி ராஜீவ்காந்தி என்பவனை குண்டர் தடுப்புச் சட்டத்திலும் கைதுசெய்ய வலியுறுத்தி, இன்று 08/10/2025 மாலை காஞ்சிபுரம் பேருந்துநிலையம் எதிரில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் மாவட்டச் செயலாளர்கள் திவ.எழிலரசு, வழக்குரைஞர் மதி.ஆதவன், மேனகாதேவி கோமகன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
 
மாவட்ட துணைச் செயலாளர் திருமாதாசன், தொகுதி துணைச் செயலாளர் ஸ்டான்லி, மகளிர் விடுதலை இயக்கம் மாவட்ட செயலாளர் இந்திரா அம்பேத்கர்வளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் போராளி அண்ணன் பார்வேந்தன், முன்னாள் மாவட்டச் செயலாளர் பாசறை செல்வராஜ், முற்போக்கு மாணவர் கழகம் முன்னாள் மாநில துணைச் செயலாளர் அருள்நாதன் ஆகியோரும், சிபிஎம் மாவட்டச் செயலாளர் தோழர் நேரு, சிபிஐ மாவட்டச் செயலாளர் தோழர் பிவி.சீனிவாசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தோழர் உதயா, தமிழர் உரிமைக் கூட்டமைப்பின் தோழர் காஞ்சி அமுதன், மக்கள்மன்றம் வழக்குரைஞர் மகா, மக்கள் அதிகார கழகம் தோழர் சரவணன், பெரியாரிய சிந்தனையாளர் தோழர் சாரதா, தன்னாட்சித் தமிழகம் தோழர் பழனி உள்ளிட்ட தோழமை அமைப்பினரும் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.
 
 
நகரச் செயலாளர் பாலாஜி வரவேற்புரையாற்றினார். பொருளாளர் வினோத்குமார் நன்றியுரையாற்றினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் சத்யா, கோபி, வழக்கறிஞர் அசோக்குமார், மாமன்ற உறுப்பினர் கௌதமி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ரேகா, திருப்பெரும்புதூர் தியாகராஜன், மகளிர் விடுதலை இயக்கம் தோழர்கள் துர்கா, கல்பனா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.


 
			 
			 
			 
			 
			