காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உலக மக்கள் நன்மை கருதி சிறப்பு பாராயணம்
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நெல்லை ஸகஸ்ரநாம மண்டலி சார்பில் உலக மக்கள் நன்மை கருதி சிறப்பு பாராயணம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் சங்கரமடத்தில் உலக மக்கள் நன்மை கருதியும் அனைத்து ஜீவராசிகளும் நோய் நொடியின்றி வாழ்வு பெறவும் வேண்டி சங்கரமட பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் உத்தரவின் பேரில் நெல்லை சகஸ்ரநாம மண்டலி சார்பில் மூக்க பஞ்சசதி சிறப்பு பாராயணம் நடைபெற்றது.

சுமார் 200க்கும் மேற்பட்ட சுமங்கலிகள் இதில் கலந்துகொண்டு சிறப்பு பாராயணம் செய்து வழிபாடு செய்தனர் இதில் மகாராஷ்டிரா, மும்பை, டெல்லி, ஸ்ரீலங்கா, துபாய் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து இவர்கள் இங்கு கலந்து கொண்டு உலக மக்கள் நன்மைக்காகவும் அனைத்து ஜீவராசிகளும் நோய் நொடி இல்லாத வாழ்வு பெறவும் வேண்டி சிறப்பு பாராயணம் செய்தனர்.
மேலும் இவர்கள் மண்டலியின் நிறுவனர்கள் சிதம்பரம் தனுஷ்கோடி ஏற்பாட்டில் சுமார் 8000 மாணவர்கள் இந்த பாராயணம் தொடர்ந்து ஆன்லைன் மூலம் செய்து வருகின்றனர். காஞ்சிபுரம் சங்கரமடம் மகா பெரியவர் பிருந்தாவனத்தின் முன்பு பாராயணம் செய்த இவர்கள் அனைவருக்கும் காஞ்சி சங்கரமடம் சார்பில் தீர்த்த பிரசாதங்களும் அன்னப்பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

மேலும் மண்டலி சார்பில் கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டு அனைத்து சுமங்கலிகளுக்கும் மஞ்சள், குங்குமம், வளையல், ரவிக்கை, வெற்றிலை பாக்கு, பல வகை தேங்காய்கள் உள்ளிட்ட மங்கல பிரசாதங்கள் அடங்கிய தாம்பூல பை வழங்கப்பட்டது.
மேலும் வரும் காலங்களில் இவர்கள் கற்ற அனைத்து ஸ்லோகங்களையும் பாராயணம் செய்து வழிபாடு செய்ய மகா பெரியவரிடம் பிரார்த்தனை வைக்கப்பட்டது. விழா குறித்து மண்டலியைச் சேர்ந்த தேவி சிறப்பு பேட்டி அளித்தார்.

