காஞ்சிபுரம் ஸ்ரீ நாக கன்னி அம்மன் அலங்கார வீதி உலா
 
					காஞ்சிபுரம் ஸ்ரீ நாக கன்னி அம்மன் ஆலயத்தில் ஒன்பதாம் ஆண்டு கூழ்வார்த்தல் விழாவில் திருவிளக்கு பூஜை புத்து மாரியம்மன் அம்மன் அலங்காரம் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா விமர்சையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் வேதவதி நதி ரோட்டில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோவில் தெருவில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலயத்தில் ஒன்பதாம் ஆண்டு கூழ்வார்த்தல் விழா விமர்சையாக நடைபெற்றது.
இதில் சாந்தாளிஸ்வரர் ஆலய குளக்கரையில் இருந்து ஜலம் திரட்டி வரப்பட்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து புத்து மாரியம்மன் அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் வணங்கி வழிபாடு செய்தனர்.
இதனை தொடர்ந்து திருவிளக்கு பூஜையும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளின் அருளை பெற்றுசென்றனர். அம்மனை வணங்கி சென்ற பக்தர்கள் அனைவருக்கும் மஞ்சள் குங்குமம் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை வேகவதி நதி ரோடு தெரு தெருவாசிகள் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.


 
			 
			 
			 
			 
			