காஞ்சிபுரத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் திறப்பு
காஞ்சிபுரத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் திறப்பு விழாவை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவத்சவா சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான மாவட்ட சிறப்பு நீதிமன்றம் திறப்பு விழா நடைபெற்றது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவத்சவா சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்வின்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் S.சௌந்தர் மற்றும் K.குமரேஷ்பாபு ஆகியோரும் உடன் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு தீர்ப்பாயத்தின் மாவட்ட நீதிபதியாக டி.ஜெய ஸ்ரீ பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வின்போது காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ப. உ. செம்மல் வரவேற்புரை நிகழ்த்தினார்.
காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன், எஸ். பி. கே. சண்முகம், காஞ்சிபுரம் MLA எழிலரசன், மேயர் M.மகாலட்சுமி யுவராஜ், கூடுதல் மாவட்ட நீதிபதி S.மோகனகுமாரி, மாவட்ட தொழிலாளர் நல நீதிமன்ற நீதிபதி சுஜாதா, தலைமை குற்றவியல் நீதிபதி S.மோகனாம்பாள், சார்பு நீதிமன்ற நீதிபதி K.S. அருண் சபாபதி, கூடுதல் சார்பு நீதிபதி S. திருமால், அரசு வழக்குரைஞர் கார்த்திகேயன் மற்றும் நீதிபதிகள், பார் அசோசியேஷன் தலைவர் சுப்பிரமணி, செயலாளர் நிர்மல் குமார், துணைத் தலைவர் கார்த்திக், பொருளாளர் ரேகா லாயர், அசோசியேஷன் தலைவர் திருப்பதி முரளி கிருஷ்ணன், செயலாளர் நரேந்திர குமார், துணைத் தலைவர் மோகன், துணைச் செயலாளர் வெங்கட்ராமன், அட்வகேட் அசோசியேஷன் தலைவர் சிவகோபு, செயலாளர் சிட்டிபாபு, துணைத் தலைவர் சுரேஷ்குமார் மற்றும் இருபால் வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் மூத்த வழக்குரைஞர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

