காஞ்சிபுரம் தாய் படவேட்டம்மன் ஆலயத்தில் ஆடி உற்சவம்
காஞ்சிபுரம் தாய் படவேட்டம்மன் ஆலயத்தில் 48 ஆம் ஆண்டு ஆடி உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை அந்த வகையில் காஞ்சிபுரம் தாய் ஸ்ரீ படவேட்டம்மன் ஆலயத்தில் 48 ஆம் ஆண்டு ஆடி உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
இதில் அம்மனுக்கு காலை மகா அபிஷேகம் செய்யப்பட்டு அம்மன் கரகம் வீதி உலா வந்து தொடர்ந்து சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்று கேழ்வரகு கூழ் படையல் இட்டு தீபாரதனை செய்து கூல்மோர் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சகல வாத்தியங்களுடன் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இவ்விழா ஏற்பாடுகளை ஆலய தர்மகர்த்தா MGவடிவேல், டாக்டர் கிருஷ்ணா பிரதர்ஸ் இணைந்து சிறப்பாக செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பட்டு புடவைகள் மலர் மாலைகள் மற்றும் நெய்வேத்தியங்கள் சமர்ப்பித்து வழிபாடு செய்தனர்.

