காஞ்சிபுரம் ஸ்ரீபடவேட்டம்மன் ஸ்ரீசுந்தரி அம்மன் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் வீதி உலா
காஞ்சிபுரம் ஸ்ரீ படவேட்டம்மன் ஸ்ரீ சுந்தரி அம்மனுக்கு 71 வது ஆண்டு ஆடித் திருவிழாவில் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
காஞ்சிபுரம் சேஷாத்திரி பாளையம் தெருவில் ஸ்ரீ படவேட்டம்மன் ஸ்ரீ சுந்தரி அம்மனுக்கு 71 வது ஆண்டு ஆடி திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் அம்மன் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் பல்வேறு வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதில் சிறப்பு தரும் வகையில் இல்லத்தின் அருகே வரும் அம்பாளுக்கு நெய்வேத்தியங்கள் மற்றும் தீபாரதனைகள் சமர்ப்பித்து வழிபாடு செய்தனர். இதில் பம்பை உடுக்கை பேண்ட் வாத்தியங்கள் முழங்க வீதி உலா வந்த அம்பாளை ரமண பக்தர்கள் வழங்கி வழிபாடு செய்தனர்.
இதில் சேஷாத்திரி பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள பகுதி வாழ் வாசிகள் பக்தர்கள் என ஏராளமான கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்று சென்றனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் தெருவாசிகளுடன் இணைந்து சிறப்பாக செய்திருந்தார்

