ஸ்ரீபெரும்புதூர் பாரதி நகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பாரதி நகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா நல சங்கத்தின் தலைவர் அருள்ராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்பதாவது வார்டுக்கு உட்பட்ட பாரதி நகர் பகுதியில் பாரதி நகர் நல சங்கம் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
சங்கத்தின் தலைவர் அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரம்மாண்ட விநாயகர் சிலை அமைக்கப்பட்டு சிறப்பு நெய்வேத்தியங்கள் சமர்ப்பிக்கப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றது.
இதில் சங்கத்தின் பொறுப்பாளர்கள் முரளி, முத்து, கோவிந்தன், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சத்தியமூர்த்தி, தமிழ் ஐயா, மின்வாரிய துறையில் ஓய்வு பெற்ற அலுவலர் சிவக்குமார், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து ஓய்வு பெற்ற கிருஷ்ணகுமார் மற்றும் விவேகானந்தா பள்ளி நிறுவனர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். விழா ஏற்பாடுகளில் சங்க தலைவர் அருள்ராஜ் சிறப்பாக செய்திருந்தார்.