கும்பகோணத்தில் விநாயகரே மூலவராகக் கொண்ட கோவில் குடமுழுக்கு விழா
கும்பகோணம் நகரில் அமையப்பெற்ற மிகப்பெரிய விநாயகர் ஆலயமான கரும்பாயிரம் விநாயகர் ஆலயத்தில் இன்று காலை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரில் விநாயகரே மூலவராகக் கொண்ட தனி கோவிலாக விளங்குவது கரும்பாயிரம் விநாயகர் ஆலயம்.
இந்த ஆலயத்தின் குடமுழுக்கு விழா 12 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.

குடமுழுக்கு விழாவினை ஒட்டி கடந்த நான்காம் தேதி யாகசால பூஜைகள் தொடங்கின.
இன்று காலை ஆறாம் கால யாகசால பூஜைகள் நிறைவு பெற்றதும், பூஜிக்கப்பட்ட புனித நீரால் கோவில் விமான கலசங்களுக்கு சிவாச்சாரி- யார்கள் குடமுழுக்கு விழா நடத்தினர்.
இவ்வாலயத்தின் குடமுழுக்கு விழாவினை காண ஆயிரக்கணக்கானோர் கோவிலில் குவிந்தனர்.

