மதுரை மாநகர மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவியாக M.கமலா நியமனம்
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஒப்புதலின் பெயரில், இளம் தலைவர் ராகுல் காந்தி மற்றும், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவி அல்கா லம்பா ஜி ஆகியோரின் ஒப்புதலின்படி, மதுரை மாவட்ட மாநகர் மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவியாக எம் கமலா நியமித்து பதவி வழங்கப்பட்டது.

இதனை வழிமொழிந்து மாநில தலைவி அசினா சையத் அவர்கள் நியமனக் கடிதத்தை M கமலா அவர்களுக்கு அளித்து வாழ்த்துகளை தெரிவித்து பதவி நியமன கடிதத்தை அளித்தார்.
அப்போது மாநில அமைப்பு மற்றும் ஒழுங்கு குழு பொதுச்செயலாளர் Hu நளினி சென்பவ் உள்ளிட்டோர், M.கமலா அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

பின்னர் மதுரை மாநில பொதுக்குழு உறுப்பினர் வரதராஜன் சந்தித்து வாழ்த்துக்களையும் கமலா பெற்றார்.
இதைத் தொடர்ந்து மதுரையில் காங்கிரஸ் வளர்ச்சிக்கு 100 வார்டுகளில் வீடு வீடாக சென்று காங்கிரஸ் சாதனைகள் கூற வேண்டும் என்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் வீரவாஞ்சிநாதன், மணிமாறன், பூக்கடை கண்ணன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

