டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நடத்திய தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணி

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நடத்திய தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணி

உலக தரம் வாய்ந்த டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மற்றும் மதுரை வெராண்டா ரேஸ் பயிற்சி மாணவர்கள் இணைந்து தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணி ஆரப்பாளையம் மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி ஞானஒளிபுரம் தேவாலயம், மேலபொன்னகரம், ஆரப்பாளையம், பேருந்து நிலையம் வழியாக நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக காவல் ஆய்வாளர் முகமது இத்ரிஸ் மற்றும் அகர்வால் மருத்துவமனை தலைமை மருத்துவர் பத்திரிநாராயணன் ஆகியோர் பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து பேசிய தலைமை மருத்துவர் பத்ரிநாத், “இந்தியாவில் இரண்டு கண்கள் கருவிழியால் பாதிக்கப்பட்ட நபர்கள் கிட்டத்தட்ட 13 லட்சம் பேர் உள்ளனர். அதேபோல் ஒரு கண் பாதிக்கப்பட்ட நபர்கள் இந்தியாவில் கிட்டத்தட்ட ஒரு கோடிக்கு மேல் உள்ளனர்.”

“இவர்களுக்கு பார்வை கிடைப்பதற்கு மாற்று கருவிழி அளித்தால் அவர்களுக்கு திரும்ப பார்வை கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.”

“எனவே இந்தியாவில் ஒரு வருடத்தில் ஒரு லட்சம் கருவிழி அறுவை சிகிச்சையில் செய்ய வேண்டி உள்ளது.”

“ஆனால் 30 ஆயிரம் முதல் 50ஆயிரம் கண்கள் மட்டுமே தானமாக கிடைக்கின்றன.”

“எனவே பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தேசிய கண்காண விழிப்புணர்வு இன்று நடைபெற்றது” என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சந்தனக்குமார் மற்றும் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி, மண்டல பொது மேலாளர் ஸ்ரீனிவாசன், கிளை மேலாள‌ர் பவானி டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை ஊழியர்கள், மதுரை வெராண்டா ரேஸ் பயிற்சி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *