மதுரையில் மகிளா காங்கிரஸ் நிறுவன நாள் கொண்டாட்டம்
 
					தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவி ஹசீனா சையத் ஆணைக்கிணங்க மதுரை தல்லாகுளத்தில் மகிளா காங்கிரஸ் நிறுவன நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

அகில இந்திய மகிளா காங்கிரஸின் 41 ஆவது துவக்க விழா மதுரை மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி கமலா மதுரை வீரன் தலைமையில் மதுரை தல்லாகுளம் மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் அலுவலகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் துணைத் தலைவி பஞ்சவர்ணம், சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர் புஷ்பவள்ளி, மாவட்ட பொருளாளர் மணிகலா, மாவட்டச் செயலாளர் ராமலட்சுமி மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி சிறப்பாகக் கொண்டாடினர்.


 
			 
			 
			 
			 
			