மீஞ்சூரில் அனைத்து தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம்

மீஞ்சூரில் அனைத்து தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம்

மீஞ்சூரில் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களில் சார்பில் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்ற நிலையில் பேரணியாக சென்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொழிலாளர்களுக்கு விரோதமான நான்கு தொகுப்பு சட்டங்களை வாபஸ் வாங்கவும், விலைவாசி உயர்வினை குறைத்திடவும் அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் நிரந்தரபடுத்தவும் பொதுதுறையை பாதுகாத்திடுவோம் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கை வலியுறுத்தி நாடு தழுவிய அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு எல்.பி எஃப்,, ஏ.ஐ.டி.யு., சி.ஐ.டி.யு,, எச்.எம்.எஸ்,, ஏ.ஐ.சி.சி.டி.யு,, யு.டி.யு.சி உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் இணைந்து பக்தவச்சலம் சிலையிலிருந்து பேரணியாக மீஞ்சூர் பிஎஸ்என்எல் அலுவலகம் வரை சென்று அலுவலகம் மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதில் பங்கேற்று தங்கள் கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். பின்னர் பேரணியாக பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு சாலையில் செல்ல முற்பட்டபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

அப்பொழுது திடீரென சாலையில் தர்ணாவில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அனைவரையும் கைது செய்தனர். இதனால் மீஞ்சூர் திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *