மு.க.ஸ்டாலின் தலைமையில் கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கம்
சென்னை கலைவாணர் அரங்கில் இன்றும் நாளையும் கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
80 ஆண்டு காலம் பொது வாழ்வு, ஐந்துமுறை முதலமைச்சராக ஆட்சி புரிந்தது மட்டுமல்லாமல், 75 திரைப்படங்களுக்கு கதை திரைக்கதை வசனங்களையும், 15 புதினங்களையும் 20 நாடகங்களையும், 15 சிறுகதைகளையும், 210 கவிதைகளையும் படைத்துள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை போற்றும் வகையில் கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
சாகித்திய அகாடமி, ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழகம் – சிறப்புநிலைத் தமிழ்த்துறை இணைந்து கலைஞர் நூற்றாண்டுக் கருத்தரங்கம் 27.06.2025 மற்றும் 28.06.2025 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது தொடக்க விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையுரை ஆற்றவுள்ளார்.

