பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் சாலை விரிவாக்கம் மேற்கொள்ளப்படும் – அமைச்சர் சேகர்பாபு உறுதி
பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் சாலை விரிவாக்கம் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சேகர்பாபு உறுதியளித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் ஆடிமாத ஞாயிற்றுக் கிழமையையொட்டி, கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட ஆட்சியர் பிரதாப், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
அப்போது, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு, மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அம்மனுக்கு படைக்கப்பட்ட கூழ் பிரசாதத்தையும் பக்தர்களுக்கு அமைச்சர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, பவானி அம்மன் ஆலயத்தில், திருக்கோவில் பணிகளுக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக அனுமதி வழங்கப்படாமல் இருந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிதி ஒதுக்கீடு செய்து 173 கோடியே 58 லட்சம் ரூபாய் செலவில் நடைபெற்று வருவதாக பெருமைபட கூறினார்.

