தந்தை பெரியார் பிறந்தநாளில் அகில இந்திய ஐக்கிய மாதர் சங்கம் புதுச்சேரி மாநிலம் பேரவை கூட்டம்

தந்தை பெரியார் பிறந்தநாளில் அகில இந்திய ஐக்கிய மாதர் சங்கம் புதுச்சேரி மாநிலம் பேரவை கூட்டம் வில்லியனூர் சாமியார் தோப்பில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாநில அமைப்பாளர் தோழர் பூங்குழலி தலைமை தாங்கினார்.
தோழர் உமா, தோழர் மும்தாஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனார். ஐக்கிய மாதர் சங்கத்தின் நோக்கம் குறித்து தமிழ் மாநில தலைவர் தோழர் காமாட்சி சிறப்புரை வழங்கினார்.

மேலும் இந்நிகழ்வில் ‘தந்தை பெரியாரும் பெண்ணியமும்’ என்ற கருத்தில் பகுத்தறிவாளர் இயக்கத்தின் மாநில துணை பொது செயலாளர் தோழர் இளவரசி சங்கர் பேசினார்.

நிறைவாக தோழர் அ.ச.தீனா அவர்கள் வாழ்த்தி பேசினார்.
அதனை தொடர்ந்து ஐக்கிய மாதர் சங்கத்தின் புதுச்சேரி மாநில புதிய நிர்வாகிகளாக தோழர் பூங்குழலி மாநில தலைவராகவும், தோழர் உமா மாநில செயலாளராகவும், தோழர் ஈஸ்வரி மாநில பொருளாளராகவும், தோழர் மும்தாஜ் துணை தலைவராகவும் மற்றும் 9 பேர் கொண்ட மாநில குழு புதிய தேர்வு செய்யப்பட்டனர். தோழர் ஈஸ்வரி நன்றியுரை கூறி நிறைவு செய்தார்.

