பொன்னேரி அருகே அந்தரத்தில் தொங்கிய அரசு பேருந்து – பயணிகள் பொதுமக்கள் அதிர்ச்சி!

பொன்னேரி அருகே அந்தரத்தில் தொங்கிய அரசு பேருந்து – பயணிகள் பொதுமக்கள் அதிர்ச்சி!

பொன்னேரி அருகே நேற்று இரவு திடீரென கொட்டி தீர்த்த கனமழையினால் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் சேதமானது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இருந்து ஆலாடு, பெரியமனபுரம் சின்னமனபுரம், கொளத்தூர், ரெட்டிப்பாளையம், தத்தைமஞ்சி, காட்டூர் வழியே மீஞ்சூர் செல்லும் தடம் எண் T40 அரசு பேருந்து, இன்று காலை வழக்கம் போல மீஞ்சூர் சென்று விட்டு மீண்டும் பொன்னேரிக்கு திரும்பியது.

நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த மழை காரணமாக வாகனங்களில் செல்வோர் சற்று அவதியுற்று வந்தனர். இந்த நிலையில் அரசு பேருந்து காட்டூரில் இருந்து தத்தைமஞ்சி நோக்கி வந்த போது, எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்கரை தடுப்புச் சுவற்றில் மோதியது.

மேலும், இரண்டு சக்கரங்கள் கீழே இறங்கி பேருந்து அந்தரத்தில் நின்றது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள், ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்டோர் அலறி அடித்துக் கொண்டு தப்பித்தால் போதும் என கீழே இறங்கி ஓடினர்.

இதைத் தொடர்ந்து காவல்துறை மற்றும் போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இந்த பேருந்து விபத்துக்குள்ளானதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து 40 ஆண்டுகளாக ஒரே பேருந்து இயக்கப்படுவதாக வும், இதுபோன்ற விபத்துகள் அவ்வப்போது ஏற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள், பழைய பேருந்தை ஓரம் கட்டிவிட்டு புதிய பேருந்துக்கு ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *