ஸ்ரீராதா, ஸ்ரீகிருஷ்ணா திருக்கல்யாண நிகழ்ச்சி
பொன்னவராயன் கோட்டை வீர பிரம்மா ஆத்மானந்தா சித்தர் குரு பீடத்தில் ஸ்ரீ ராதா, ஸ்ரீ கிருஷ்ணா திருக்கல்யாண நிகழ்ச்சி அதிவிமரிசையாக நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பொன்னவராயன் கோட்டை வீர பிரம்மா ஆத்மானந்தா சித்தர் குறிப்பிடத்தில் ஸ்ரீராதா – ஸ்ரீகிருஷ்ணா திருக்கல்யாண நிகழ்ச்சி அதிவிமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக கோயில் எதிர்புறம் உள்ள குளக்கரையிலிருந்து சீர்வரிசை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அதன் பின்பு மேளதாளங்கள் முழங்க ஸ்ரீ ராதாவுக்கும் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இந்த திருக்கல்யாண நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆத்மா ராமலிங்க சுவாமிகள் மற்றும் வீர பிரம்மா ஆத்மானந்தா சித்தர் பீட ஆசிரமம் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

