தாய்ப்பால் வாரம்: உச்சிப்புளி ரோட்டரி சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்
உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ரோட்டரி சங்கம் சார்பில் *தாய்மையை போற்றுவோம்* என்கிற திட்டத்தின் கீழ் உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பாலூட்டும் வசதியுள்ள நைட்டிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பட்டய தலைவர் நாகேஸ்வரன், தலைவர் Rtn. Dr.K.தாமரை செல்வன், செயலாளர் Rtn. Dr.M.முகமது சலீம் அலி, பகுதி 3 ன் மாவட்ட இயக்குனர் PAG. S.செந்தில் குமார் மற்றும் உறுப்பினர்கள் சக்திவேல், ஜெயபிரகாஷ், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

