ராமநாதபுரத்தில் காலை உணவு திட்டம்
 
					ராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மற்றும் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து காலை உணவு அருந்தினர்.

தமிழகம் முழுவதும் இன்று முதல் தமிழ்நாடு அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவத் திட்டம் விரிவாக்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் படிக்கும் 270 மாணவ, மாணவிகள்பயன்பெரும் விதமாக இந்த திட்டத்தை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மற்றும் ராமநாதபுரம் சட்டப்பேவை உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதனைதொடர்ந்து, மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து காலை உணவு அருந்தினர்.
இந்த நிகழ்ச்சியில், நகர் மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன்தங்கம், நகராட்சி ஆணையர் அஜிதா பர்வீன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.


 
			 
			 
			 
			 
			