ராமநாதபுரத்தில் ஒரே நாளில் காங்கிரஸ் அலுவலகத்தை மீட்ட மீட்புக் குழு

ராமநாதபுரத்தில் ஒரே நாளில் காங்கிரஸ் அலுவலகத்தை மீட்ட மீட்புக் குழு

சொத்துக்களை மீட்க வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுவினர், ஒரே நாளில் காங்கிரஸ் அலுவலகத்தை மீட்டுள்ளனர்.

ஜூலை 28ம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சொத்துகளை பாதுகாத்திடும் விதமாக தமிழ்நாடு காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழு தலைவர் கே.வீ.தங்கபாலு Ex MP தலைமையில், இணைச் செயலாளர் நிதின் கும்பல்கர், ஒருங்கிணைப்பாளர் S.S.ராமசுப்பு Ex MP, பொதுச் செயலாளர் D.செல்வம் ஆகியோர் பரமக்குடி இராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கான சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு அதனை மீட்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டனர்.

இந்நிலையில் நேற்று ஜூலை 29 ஆம் தேதி ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே 16 சென்ட் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடத்தை ராமநாதபுரம் மாவட்ட, நகர காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் திருவாடானை சட்டமன்ற காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் தலைமையில், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ராஜாராம் பாண்டியன், தெய்வேந்தின், ஜோதிபாலன், சரவண காந்தி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.ஆர். ஆதி, மாநில செயலாளர் செந்தாமரை கண்ணன் மாநில செயலாளர் குமார், வழக்கறிஞர் பிரிவு அன்பு செழியன் மற்றும் வட்டார நகர காங்கிரஸ் கட்சி மூத்த நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஒன்றிணைந்து அவ்விடத்தை மீட்டு அதில் அந்த இடத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கான போர்டு வைத்து காங்கிரஸ் கட்சியின் கொடி பறக்க விடப்பட்டு இது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *