ராமநாதபுரம் காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்
இந்திய தேர்தல் ஆணையத்தின் சமீபகால செயல்பாடுகளை கண்டித்து ராமநாதபுரம் காங்கிரஸ் கட்சியினர் திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் செய்து ஊர்வலமாக சென்றனர்.
மத்தியில் ஆளும் பாஜக மோடி அரசுக்கு உடந்தையாக இருப்பதாக கருதப்படும் இந்திய தேர்தல் ஆணையத்தின் சமீபகால செயல்பாடுகளை கண்டித்து தொடர்ந்து போராடி வரும் இளம் தலைவர் ராகுல்காந்தி அவர்களின் கரத்தை வலுப்படுத்தும் விதமாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை அவர்களின் அறிவுறுத்தலின்படி 14.08.2025 மாலை இராமநாதபுரம் அரண்மனை முன்பு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட பொறுப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் இராம. கருமாணிக்கம் தலைமையில், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ராஜாராம் பாண்டியன், ஜோதிபாலன் முன்னிலையில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து அரண்மனையில் இருந்து மத்தியக் கொடிக்கம்பம், சாலைத்தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர் இதில் மாநில செயலாளர் குமார், மகிளா காங்கிரஸ் தலைவி ராமலட்சுமி, முன்னாள் ராணுவ பிரிவு தலைவர் கோபால், பொதுச் செயலாளரார் சோபா ரங்கநாதன், துணைத் தலைவர் துல்கீப், நகர தலைவர் கோபி, வட்டார தலைவர் சேதுபாண்டியன், உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

