அமைச்சர் ராஜகண்ணப்பனின் அலுவலக உதவியாளர் மீது தாக்குதல் – இருவர் மீது வழக்கு
முதுகுளத்தூரில் நடைபெற்ற திமுக கூட்டத்தின்போது, அமைச்சர் ராஜகண்ணப்பனின் அலுவலக உதவியாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில், 2 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் திமுக கூட்டம் நடைபெற்றது. முதுகுளத்தூர் தொகுதி என்பதனால் தொகுதி MLA-வும் வனம் மற்றும் கதர் கிராம தொழில் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் முதுகுளத்தூர் அலுவலக உதவியாளர்கள் ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது இதில் கலந்துகொண்ட கடலாடி தெற்கு ஒன்றிய திமுக மாயகிருஷ்ணன் மற்றும் கடலாடி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முரளிதரன் ஆகியோர் அமைச்சர் ராஜகண்ணப்பனின் சட்டமன்ற அலுவலக நேர்முக உதவியாளர் தோனி என்பவரை கொடூரமாக தாக்கி உள்ளனர்.
மேலும் தாக்குதலுக்கு உள்ளான அமைச்சரின் உதவியாளர் தோனி முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மகாலில் உள்ள சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர். தி.மு.க.,வினர் இடையே ஏற்பட்ட மோதல் குறித்த வீடியோ வைரலானது.
இச்சம்பவம் குறித்து முதுகுளத்தூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அவர் தாக்கப்படும் சிசிடிவி பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தோனி அளித்த புகாரின் பேரில் ஒன்றிய செயலாளர் மாயகிருஷ்ணன், இளைஞரணி அமைப்பாளர் முரளிதரன் மீதும், முரளிதரன் அளித்த புகாரில் பேரில் டோனி மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

