ராமநாதபுரம் முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கம் சார்பில் சுதந்திர தின கொண்டாட்டம்
ராமநாதபுரம் முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கத்தின் சார்பில் 79 ஆவது சுதந்திர தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்தியாவின் 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் நலச் சங்கத்தின் சார்பில் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்திவமனை அருகே உள்ள நலச்சங்க கட்டிடத்தில் சங்கத் தலைவர் ஹைதர் அலி, செயலாளர் தர்மலிங்கம், பொருளாளர் பூமிநாதன் ஏற்பட்டில், கட்டிட நிர்வாகி முருகானந்தம் முன்னிலையில் மூத்த சங்கநிர்வாகி ராமசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள பிச்சை, நாகராஜ், அழகர், முருகன்
மற்றும் பலர் செய்திருந்தனர். வருகை தந்த முன்னாள் ராணுவத்தினர் அனைவரையும் மாவட்ட செய்தி தொடர்பாளர் கோபால் வரவேற்றார்.

